முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

இடைப்பாடி, ஜன.17:  பொங்கல் பண்டிகையையொட்டி, இடைப்பாடி தொகுதி நெடுங்குளம் ஊராட்சி சிலுவம்பாளையத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் விழா கொண்டாடுவதற்காக வந்தார். அப்போது, அவருக்கு மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் ராஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விழாவில் வெள்ளாலபுரம் ஊராட்சிமன்ற தலைவர் கிருஷ்ணவேணி கணேசன், துணைத்தலைவர் கோபால், மகளிரணி ஒன்றிய செயலாளர் தங்கஆறுமுகம், உறுப்பினர்கள் பழனிச்சாமி செல்வமணி, ரத்தின ஜெகதீஸ்வரி, அருள் சீரங்காயி அம்மாள், சிட்லிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>