×

சுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்

நாமக்கல், ஜன.17: பொங்கல் விடுமுறையையொட்டி, நாமக்கல்லில் உள்ள சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பொதுமக்கள் கூடுவது வழக்கம். கடந்த 8 மாதங்களுக்கு பிறகு, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அரசு அறிவித்ததையடுத்து சுற்றுலா தலங்களுக்கு வரும் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.  இந்நிலையில், பொங்கல் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தலங்களுக்கு ஏராளமானவர்கள் வரத்தொடங்கினர். கொரோனா தொற்று பரவல் காரணமாக, கொல்லிமலைக்கு மக்கள் செல்ல அனுமதிக்கவில்லை. இதையடுத்து, கொல்லிமலை அடிவார பகுதியில் சின்னகாரவள்ளியில் உள்ள தடுப்பணையில் குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். அதேபோல், நாமக்கல் நகரில் உள்ள செலம்பகவுண்டர் பூங்காவில் உள்ளூர் மக்கள் ஏராளமானவர்கள் குழந்தைகளுடன் விளையாடி பொழுதை கழித்தனர். காவிரி ஆற்றங்கரை பகுதியிலும் ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வந்து குளித்தனர்.

Tags : Crowds ,tourist sites ,
× RELATED உத்திரமேரூர் வேணுகோபாலசாமி கோயிலில்...