கருணாநிதி நினைவு கொடிக்கம்பம் அமைப்பு மாவட்ட பொறுப்பாளர் கொடி ஏற்றினார்

நாமக்கல், ஜன.17: நாமக்கல்லை அடுத்த நல்லிபாளையத்தில், மேற்கு நகர திமுக சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவு கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. தைப்பொங்கலையொட்டி இந்த நினைவு கொடி கம்பத்தில் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் திமுக கொடி ஏற்றி வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி பேசினார். நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்கு நகர பொறுப்பாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மாநில இலக்கிய அணி புரவலர் மணிமாறன், மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் ராணி, சட்ட திருத்த குழு உறுப்பினர் நக்கீரன், ஒன்றிய செயலாளர்கள் கெளதம், பழனிவேல், நவலடி, தெற்கு நகர பொறுப்பாளர் ராணா ஆனந்த், தமிழ்நாடு - பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் அய்யாவு, பொறுப்புக் குழு உறுப்பினர்கள் ரவீந்திரன், செல்வமணி, ரவிச்சந்திரன், அன்பரசன், அன்பரசு, மனோகரன், செல்வகுமார், அருள் செல்வன், ராஜவேல், மாணவரணி அமைப்பாளர் தமிழ்ச்செல்வன், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாத், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இளம்பரிதி, நந்தகுமார் மற்றும் வார்டு செயலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புதுச்சத்திரம் அடுத்த ராமநாயக்கன்பட்டியில், திமுக  கொடியேற்று விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய பொறுப்பாளர் கௌதம் தலைமை  தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். இதில்  கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் கலந்துகொண்டு, திமுக கொடியை  ஏற்றிவைத்து  பொதுமக்களுக்கு  இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட  விவசாய அணி தலைவர் மனோகரன், ஒன்றிய குழு துணைத்தலைவர்  ராம்குமார், இளைஞரணி சுந்தரம், மாணவரணி அமைப்பாளர் குமார், கிளை செயலாளர்  பெரியசாமி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். வெண்ணந்தூர் ஒன்றியம் கட்டனாச்சம்பட்டி அத்திபலகானூரில், திமுக சார்பில் பொங்கல் விழா மற்றும் கொடி ஏற்று விழா நடந்தது. இதில் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஸ்குமார் கலந்துகொண்டு கொடியேற்றி, பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்கினார். இதில் ஒன்றிய பொறுப்பாளர் துரைசாமி, ஊராட்சி தலைவர் தங்கதுரை, விஜயபாஸ்கர், லோகமணி, தமிழ்மணி, யுவராஜ், சண்முகம், ரமேஷ், தேவன், பிரபு, நடேசன், சக்திவேல், பழனிசாமி, சின்னபையன், சீனிவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>