மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு செங்குட்டுவன் எம்எல்ஏ அறிக்கை

கிருஷ்ணகிரி, ஜன.17: கிருஷ்ணகிரி  கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள  அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (17ம்தேதி) மாலை 6 மணிக்கு  கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு ஓட்டலுக்கு வருகை தர உள்ளார். இதையடுத்து,  அவருக்கு பர்கூர் ஒன்றியம் கந்திகுப்பம் கிராமத்தில், கிழக்கு மாவட்ட திமுக  சார்பில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இதில் தாரை தப்பட்டை,  கரகாட்டம், ஒயிலாட்டம், பேண்டு வாத்தியங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன்  உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இதையொட்டி தனிமேடை அமைக்கப்பட்டுள்ளது.  எனவே, திமுக கொடியேந்தி மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு,  பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள்  மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்,  உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் அனைவரும் திரண்டு தலைவரை வரவேற்க  வேண்டும். இவ்வாறு செங்குட்டுவன் எம்எல்ஏ  தெரிவித்துள்ளார்.

Related Stories:

>