எருது விடும் விழாவில் 400 காளைகள் பங்கேற்பு ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்

கிருஷ்ணகிரி, ஜன.17:  கிருஷ்ணகிரி அருகே நடந்த எருது விடும் திருவிழாவில் 400 காளைகள் பங்கேற்றன.  இதை ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையினையொட்டி எருது விடும் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி அடுத்த கிட்டம்பட்டியில் நேற்று நடந்த எருது விடும் விழாவில் 400க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. துள்ளி குதித்தபடி ஓடிய காளைகளை விரட்டியடிபடி இளைஞர்கள் ஓடினர். வண்ண பதாகைகளை தலையில் மாட்டியபடி காளைகள் துள்ளி குதித்தபடி வந்ததை கிட்டம்பட்டி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர். இந்த எருது விடும் திருவிழாவினையொட்டி கிருஷ்ணகிரி டவுன் மற்றும் தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: