மது, குட்கா விற்ற 63பேர் கைது 400 மதுபாட்டில்கள் பறிமுதல்

தர்மபுரி, ஜன.17: திருவள்ளுவர் தினத்தையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் மதுக்கடைகளை மூட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அந்தந்த எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது சந்து கடைகளில் மதுபானங்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக தர்மபுரியில் 14 பேர், அரூர் 13 பேர், பென்னாகரம் 11 பேர் மற்றும் பாலக்கோட்டில் ஒருவர் என மாவட்டம் முழுவதும் 39 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 400பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், குட்கா விற்றதாக தர்மபுரியில் 5பேர், அரூர் 8பேர், பென்னாகரம் 7பேர், பாலக்கோடு 4 பேர் என மொத்தம் 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>