வெறிச்சோடிய இறைச்சி கடைகள்

தர்மபுரி, ஜன.17: பொங்கல் பண்டிகை முடிந்த பின் வரும் கரிநாளில், அசைவ உணவு சமைத்து சாப்பிடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். சனிக்கிழமையான நேற்று கரிநாள் வந்ததால், தர்மபுரி மாவட்டத்தில்  பெரும்பாலான மக்கள் அசைவம் தவிர்த்தனர். இதன் காரணமாக, இறைச்சி கடைகள் வெறிச்சோடி காணப்பட்டது. தர்மபுரி கடைவீதி, திருப்பத்தூர் சாலை, கந்தசாமி தெரு, மதிகோன்பாளையம், பழைய தர்மபுரி, இலக்கியம்பட்டி, ஒட்டப்பட்டி, வெண்ணாம்பட்டி, அதியமான்கோட்டை என மாவட்டம் முழுவதும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. தர்மபுரியில் நேற்று ஆட்டிறைச்சி கிலோ ₹800 வரையும், பிராய்லர் சிக்கன் ₹180 வரையும், நாட்டுக்கோழி கிலோ ₹350 வரை விற்பனை செய்யப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை இறைச்சி விற்பனை அதிகரிக்கக்கூடும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related Stories:

>