வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் தடையை மீறி மது விற்பனை 47 பேர் கைது

வேலூர், ஜன.17: வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் தடையை மீறி மது விற்பனை செய்த 47 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் திருவள்ளுவர் தினமான நேற்றுமுன்தினம் மது விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலும் மது விற்பனை செய்வதை தடுக்க வேலூர், திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் எஸ்பிக்கள் உத்தரவின்பேரில் மது விலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி திருநாவுக்கரசு தலைமையில், வேலூர் இன்ஸ்பெக்டர் ேஹமாவதி, குடியாத்தம் இன்ஸ்பெக்டர் லட்சுமி, வாணியம்பாடி இன்ஸ்பெக்டர் தமிழரசி உட்பட மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் குழுவினர் சோதனை நடத்தினர். இதில் தடையை மீறி வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் மது விற்பனை செய்த 47 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 38 லிட்டர் சாராயம், 206 லிட்டர் மது பாட்டில்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது டிஆர்ஓ தொடங்கி வைத்தார்

Related Stories:

>