தங்கப்பழம் கல்லூரியில் சமத்துவ பொங்கல்

நெல்லை, ஜன. 17: வாசுதேவநல்லூர் தங்கப்பழம் வேளாண் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.  கல்லூரித் தாளாளர் முருகேசன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ராமலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகள், உதவிப் பேராசிரியர்கள், சர்க்கரைப் பொங்கலிட்டனர். இதையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு தாளாளர் எஸ்.டி. முருகேசன் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.   கல்லூரிப் பேராசிரியர் முகமது இக்ஸானுல்லா நன்றி கூறினார். திமுக நிதியுதவிஇதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கு இணங்க தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் நேரில் சென்று ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.  நிகழ்ச்சியில் குருவிகுளம் தெற்கு ஒன்றியச் செயலாளர் கடற்கரை, மேலநீலிதநல்லூர் ஒன்றியச் செயலாளர் வெற்றி விஜயன், கள்ளிக்குளம் கிளைச் செயலாளர் சவுந்தரபாண்டியன், விவசாய அணி மாவட்ட துணை

அமைப்பாளர் குமார், குருவிகுளம் கிளைச்செயலாளர் செந்தில், பொறியாளர் அணி போத்தி சங்கர், முன்னாள் சேர்மன் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>