சிங்கம்பாறை சின்னப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பாப்பாக்குடி, ஜன. 17:  முக்கூடல் அருகே சிங்கம்பாறையில் புனித சின்னப்பர் திருத்தல திருவிழா, நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருப்பலிக்கு தலைமை வகித்த கோவில்பட்டி பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ், ஆரம்ப ஜெபம் செய்து கொடியை அர்ச்சித்து ஏற்றினார். நிகழ்ச்சியில் பங்குத்தந்தைகள் தாளார்குளம் சந்தியாகு, வெய்க்காலிபட்டி லியோ ஜெரால்டு, ஆப்பிரிக்கா அருள்ஜோதி அலெக்ஸ், பங்குத்தந்தை செல்வராஜ், சிங்கம்பாறை மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாகப் பங்கேற்றனர். தொடர்ந்து நடந்த திருப்பலியில் லியோ ஜெரால்டு மறையுரை வழங்கினார். பின்னர் பொதுஅசனம் நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை திருப்பலி மற்றும் கலைநிகழ்ச்சி நடக்கிறது. 23ம் தேதி காலை சிறுவர், சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்குதல், மாலையில் நற்கருணை பவனி, 24ம் தேதி மாலை தேரடி திருப்பலி, 25ம் தேதி திருவிழா நிறைவு திருப்பலி, புனிதரின் தேர் பவனி, மாலையில் கொடியிறக்கம், நற்கருணை ஆசீர் நடக்கிறது. ஏற்பாடுகளை சிங்கம்பாறை புனித சின்னப்பர் திருத்தல பங்குத்தந்தை செல்வராஜ் தலைமையில் ஊர் பொறுப்பாளர்கள் தலைவர் பிரகாசம், செயலாளர் வில்சன், பொருளாளர் பவுல் செபஸ்தியான், துணைத்தலைவர் ஆரோக்கியம், கணக்கர் பவுல் சார்லஸ் மற்றும் இளைஞர் அணியினர், பங்கு இறைமக்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: