பொங்கல் விழா போட்டிகள் நாங்குநேரி ரூபி மனோகரன் பரிசு வழங்கினார்

நெல்லை, ஜன. 17: நாங்குநேரி சட்டமன்ற தொகுதி புலியூர்குறிச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட கோதைசேரியில் ஊர் மக்கள் பொங்கல் விழா கொண்டாடினர். விழாவில் பங்கேற்ற தமிழக காங். பொருளாளர் ரூபி மனோகரன் நீளம் தாண்டுதல் போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியில் முதலிடம் பெற்ற இளைஞருக்கு தனது சொந்தப் பணத்தில் இருந்து ஆயிரம் ரூபாயும், இரண்டாம், மூன்றாம் இடத்தை பெற்றவர்களுக்கு தலா 500 ரூபாயும் பரிசாக வழங்கினார்.  விழாவில், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் தமிழ்ச்செல்வன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜகோபால், முன்னாள் துணைத் தலைவர் இளையபெருமாள் நாடார், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் செல்லப்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>