ஏரல் அருகே கொற்கை விலக்கில் டாஸ்மாக் கடை உடைத்து கொள்ளை முயற்சி பெட்டியை வெட்ட முடியாததால் பணம் தப்பியது

ஏரல், ஜன. 17: ஏரல் அருகே கொற்கை விலக்கு நான்குமுக்கு சாலையில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு முக்காணி வடக்கு யாதவர் தெருவைச் சேர்ந்த மாரியப்பன்(51) சூப்பர் வைசராகவும், சுப்பிரமணியன், சங்கர் விற்பனையாளராகவும் உள்ளனர். கடந்த 14ம்தேதி விற்பனை முடிந்தவுடன் இரவு வழக்கம் போல் கடையை ஊழியர்கள் மூடிசென்றனர். 15ம்தேதி திருவள்ளுவர் தினம் விடுமுறை என்பதால் நேற்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சூப்பர்வைசர் மாரியப்பன் ஏரல் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி, எஸ்.ஐக்கள் முருகபெருமாள், பாலு மற்றும் போலீசார் டாஸ்மாக் கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் மர்ம நபர்கள் ஷட்டரை வெல்டிங் செய்து கட் பண்ணி உள்ளே நுழைந்து இரும்பு பெட்டி லாக்கரை உடைக்க முயன்றுள்ளனர். பெட்டியை உடைக்க முடியாததால் திரும்பி சென்றனர். இதனால் இரும்பு பெட்டியில் இருந்த லட்சகணக்கான பணம் தப்பியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>