புதுக்கோட்டை அருகே பைக் விபத்தில் முதியவர் காயம்

புதுக்கோட்டை, ஜன. 17: புதுக்கோட்டை அருகே பைக் விபத்தில் முதியவர் காயம் அடைந்தார். தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை கோரம்பள்ளம் னிநகரை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி(62), மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நேற்று முன்தினம் கோரம்பள்ளம் சந்திப்பில் இருந்து தூத்துக்குடிக்கு பைக்கில் சென்றார். அப்போது புதுக்கோட்டை மறவன்மடம் திரவியபுரத்தை சேர்ந்த முத்துசாமி மகன் மணிகண்டன்(28) என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியதில் வெள்ளைச்சாமி பலத்த காயம் அடைந்தார். அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின்பேரில் புதுக்கோட்டை எஸ்.ஐ.இமானுவேல் ஜெயசேகர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories:

>