திருச்செந்தூரில் மார்கழி பஜனை நிறைவு

திருச்செந்தூர், ஜன. 16: திருச்செந்தூர் மேலத்தெரு யாதவர் ராமகிருஷ்ணானந்த மார்கழி பஜனை சபா சார்பில் மார்கழி பஜனை குழுவினர். தினமும் அதிகாலை 4 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜையை தொடர்ந்து பஜனை சபாவிலிருந்து சிறு குழந்தைகள் உள்பட ஏராளமானோர் திருப்பாவை மற்றும் கண்ணன் பாடல்களை பஜனையாக பாடியபடி ஊர்வலமாக மாரியம்மன் கோயில் தெரு, தெற்குபுதுத்தெரு, வீரமாகாளியம்மன் கோயில் தெரு, முத்தாரம்மன் கோயில் தெரு, கிருஷ்ணன் கோயில் தெரு, இல்லத்தார் தெரு, வாய்க்காங்கரை தெரு, தெற்கு யாதவர் தெரு வழியாக மீண்டும் பஜனை சபா வந்தனர். பின்னர் சுவாமிக்கு தீபாராதனையை தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது. பொங்கலன்று இரவில் கொட்டும் மழையில் சுவாமி சப்பரம் வீதிஉலா நடந்தது.  இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மேலத்தெரு யாதவர் மகாசபை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories:

>