பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டியில் விளையாட்டு போட்டி அமைச்சர் கடம்பூர் ராஜூ பரிசு வழங்கினார்

கோவில்பட்டி, ஜன. 17: கோவில்பட்டியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பரிசுகள் வழங்கினார். கோவில்பட்டி ஹாக்கி கழகம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர் திருநாள் விளையாட்டு போட்டிகள் ராஜீவ்நகர் அப்துல் கலாம் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றன. ஓட்டப்பந்தயம், மியூசிக்கல் சேர், சைக்கிள் போட்டி, ஆண்கள் பெண்களுக்கான கபடி போட்டி, கயிறு இழுத்தல், பலூன் உடைத்தல் மற்றும் ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பரிசுகள் வழங்கி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து அரசின் சாதனை திட்டங்கள் குறித்து பேசினார். விழாவில் யூனியன் துணைசேர்மன் பழனிச்சாமி, அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் அன்புராஜ், அய்யாத்துரை பாண்டியன், இனாம்மணியாச்சி ஊராட்சிதலைவர் செல்வராஜ், வக்கீல் சிவபெருமாள், ஹாக்கி பயிற்சியாளர்கள் மாரியப்பன், சுதாகர், மதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>