×

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் பயங்கர தீ விபத்து: 20 பேர் உயிரிழப்பு

ஜகார்த்தா: இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் 7 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியாவின் தலைநகரான ஜகார்த்தாவில் 7 மாடி கொண்ட அலுவலக கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் அந்த கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அடுக்குமாடியின் முதல் தளத்தில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியது. இதனைத் தொடர்ந்து, தகவலறிந்து சம்பவயிடத்துக்கு விரைந்த இந்தோனேசிய தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கப் போரடி வருகின்றனர்.

7 மாடி கொண்ட கட்டடத்தில் அடுத்தடுத்து தீ பரவியதில் உடல் கருகியும் மூச்சுத் திணறியும் 20 பேர் உயிரிழந்தனர். தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நீண்ட நேரம் போராடி தீ அணைக்கப்பட்ட நிலையில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Jakarta ,Indonesia ,
× RELATED அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில்...