×

மலை எங்கும் போய்விடாது: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு வாதம்

மதுரை: மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டும். அதற்குள் திரி, எண்ணெய், மலை எங்கும் போய்விடாது என திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மலை உச்சியில் தீபத்தை ஏற்றுமாறு உத்தரவிட்ட நீதிபதியின் உத்தரவை அமல்படுத்தத் தவறியதாக மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர், கோவில் நிர்வாக அதிகாரி ஆகியோர் மீது ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள்:
மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டும். அதற்குள் திரி, எண்ணெய், மலை எங்கும் போய்விடாது. நீதிபதி உத்தரவு சரியா தவறா என்பதற்கே உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எப்படி இடைக்கால உத்தரவு கோர முடியும்.

கோயில்களில் இதைச் செய்யக்கூடாது, இதைச் செய்ய வேண்டும் என யாரும் சொல்ல முடியாது; தேவஸ்தானமே முடிவு செய்ய இயலும். இது குறித்த விரிவான உத்தரவுகள் உள்ளன. பிரச்னை வந்தால், நீதிமன்றத்தைக் காரணம் காட்ட இயலாது. அரசே பொறுப்பேற்க வேண்டும். சட்ட ஒழுங்கை கருத்தில் கொள்ள வேண்டும். மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதால், அதன் பின் இந்த வழக்கை பட்டியலிட வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.

நீதிபதி;
திருப்பரங்குன்றம் விவகாரம் தீபம் ஏற்றும் வழக்கு மட்டும் அல்ல, சொத்துரிமை சார்ந்த வழக்கும்தான். உங்கள் கோரிக்கையை(தமிழ்நாடு அரசு) ஏற்று வழக்கை ஒத்திவைக்கிறேன். ஆனால் அடுத்த முறை விசாரணைக்கு வரும்போது இடைக்கால உத்தரவு பெறப்படவில்லை எனில் அப்போதும் ஒத்திவைக்க இயலாது என கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு தலைமைச்செயலாளர், டிஜிபி டிச.17-ம் தேதி காணெலி காட்சி வாயிலாக ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டர்.

Tags : Tamil Nadu government ,Thiruparankundram ,Madurai ,
× RELATED இண்டிகோ விமான சேவைகளை 5% வரை குறைக்க...