ஜிப்மருக்கு சிகிச்சைக்கு வந்த வாலிபர் மாயம்

புதுச்சேரி, ஜன. 17:  ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரமோத் மாலிக். இவர் புதுச்சேரி மேட்டுப்பாளையம் சோனியாகாந்தி நகர் அப்துல்கலாம் தெருவில் உள்ள தனது அண்ணன் சுரேஷ் மாலிக் வீட்டில் தங்கியிருந்தார். சற்று மனநிலை பாதிக்கப்பட்ட பிரமோத் மாலிக்கை, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சம்பவத்தன்று உறவினர்கள் அழைத்து சென்றனர். ஆனால் அங்கிருந்து பிரமோத் மாலிக் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது அண்ணன் சுரேஷ் மாலிக், கோரிமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து மாயமான பிரமோத் மாலிக்கை தேடி வருகின்றனர்.

Related Stories:

>