2ம் தவணை தடுப்பூசி கண்டிப்பாக போட வேண்டும்

தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்த பின் கலெக்டர் அரவிந்த் நிருபர்களிடம் கூறுகையில், குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், ஸ்ேகன் சென்டர்கள், சித்தா, ஆயுர்வேத மருத்துவமனை பணியாளர்கள் என 1,147 நிறுவனங்களில் பணிபுரியும் 20 ஆயிரத்து 564 பணியாளர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.  இவர்களின் பெயர்கள் ஏற்கனவே கோவின் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.  அப் பயனாளிகளுக்கு தடுப்பூசி போடும் நாள், இடம், நேரம் ஆகிய தகவல்கள் அவர்களுடைய செல்போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 28 நாட்கள் கழித்து மீண்டும் 2ம் தவணை தடுப்பூசி கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும். பயனாளிகள் தங்கள் பெயர்களை பதிவு செய்யும்போது கொடுத்த அடையாள அட்டையுடன் முகாமுக்கு வந்து தடுப்பூசி ேபாட்டுக்கொள்ளலாம். குமரி மாவட்டத்துக்கு முதற்கட்டமாக 22 ஆயிரத்து 600 கோவி ஷீல்டு தடுப்பு மருந்துகள் வந்துள்ளன. 2ம் கட்டமாக காவல்துறையினர் உட்பட முன்கள பணியாளர்களுக்கும், 3ம் கட்டமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நீண்ட கால நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், 4ம் கட்டமாக பொதுமக்களுக்கும் தடுப்பூசிகள் போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

Related Stories: