×

குமரியில் மூன்று நாள் சுற்றுப்பயணம் கனிமொழி எம்.பி நாளை குமரி வருகை நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்

நாகர்கோவில்,  ஜன.17:  குமரி மாவட்டத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணமாக வரும் கனிமொழி எம்.பி நாளை (18ம் தேதி) மாலை நாகர்கோவிலில் நடைபெறுகின்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
கனிமொழி எம்.பி குமரி மாவட்டத்தில் நாளை (18ம் தேதி) மாலை வருகை தருகிறார். மாலை 6 மணிக்கு நாகர்கோவிலில் நாகராஜா திடலில் நடைபெறுகின்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். பின்னர் 19ம் தேதி வெள்ளிமலை பகுதியில் காலை 11 மணிக்கும், தர்மபுரம் பகுதியில் மாலை 5 மணிக்கும் நடைபெறுகின்ற கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிகிறார்.
மேலும் அன்று வடசேரியில் காய்கறி வியாபாரிகள், மீன் வியாபாரிகளுடன் சந்திப்பு, தோவாளை பூ மார்க்கெட்டில் பூ வியாபாரிகளுடன் சந்திப்பு, குளச்சலில் துறைமுக மீனவர்களுடன் சந்தித்து குறைகள் கேட்கும் அவர் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கும் சென்று பார்வையிடுகிறார்.

நாகர்கோவிலில் நாகராஜா திடலில் 18ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறுகின்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், பேரூர் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், கிளை கழகத்தினர் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாகர்கோவில் நாகராஜா திடலில் கனிமொழி எம்.பி பேசுகின்ற பொதுக்கூட்டம் நடைபெறுகின்ற மைதானம் சீரமைப்பு பணிகள் நேற்று நடைபெற்றது. அந்த பகுதியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை ஜேசிபி உதவியுடன் திமுகவினர் சரி  செய்தனர். இதனை சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ உட்பட கட்சி நிர்வாகிகள் பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் 20ம் தேதி கனிமொழி எம்.பி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

பெண்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் குமரி கிழக்கு மாவட்டத்தில் 3 சட்ட மன்ற தொகுதிகளில் கனிமொழி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் குறித்து, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநில மகளிர் தொண்டரணி ெசயலாளர் முன்னாள் எம்.பி ஹெலன் டேவிட்சன் தலைமை வகித்தார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ஜெசிந்தா, மாவட்ட மகளிரணி தொண்டரணி அமைப்பாளர் லதா, மாநகர செயலாளர் மகேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:   கனிமொழி எம்.பி. கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் மகளிரணி நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும். பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளில் பெண்கள் அதிகளவில் கலந்து கொள்வதன் மூலமாக தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட போவது பற்றிய தகவலை எளிதாக அனைத்து  தரப்பு மக்களிடமும் கொண்டு செல்ல முடியும்.  கடந்த 10 ஆண்டுகளாக மக்களுக்கு எதுவும் செய்யாமல், ஊழல் மூலம் பல ஆயிரம் கோடிகளை சம்பாதித்து வைத்துள்ள அதிமுக அந்த பணத்தில் ஒரு பகுதியை தாராளமாக செலவு செய்து திமுக ஆட்சிக்கு வருவதை தடுக்க முயற்சிக்கும். இந்த முயற்சியை மக்களுடன் இணைந்து திமுக தடுக்க இவ்வாறு திமுக கூட்டங்களில் பெருந்திரளாக கலந்து கொள்வதும், திமுக ஆட்சிக்கு வரும் என்ற நேர்மறை சிந்தனையை மக்களிடம் ஏற்படுத்தும். இதன் மூலம் 5 சதவீதம் வாக்குகள் அதிகமாக திமுகவிற்கு கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Kumari Kanimozhi MP ,tour ,meeting ,visit ,Nagercoil ,
× RELATED அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 5-வது கட்ட...