வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் பார்வையாளர் ஆய்வு

நாகர்கோவில், ஜன.17: குமரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை பார்வையாளர் ஜோதிநிர்மலா சாமி ஆய்வு செய்தார். குமரி மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு மேலாண்மை இயக்குநருமான ஜோதிநிர்மலா சாமி தலைமையில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் முன்னிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான மூன்றாம் கட்ட ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.  மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாதவன், உதவி ஆணையர் (ஆயம்) சங்கரலிங்கம், தேர்தல் தனி தாசில்தார் சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>