×

த.மா.கா. சார்பில் பொங்கல் விழா

திருப்பூர், ஜன. 17: திருப்பூர் மாநகர் மாவட்ட த.மா.கா. சார்பில் பொங்கல் விழா காந்திநகரில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான மூப்பனார் பவனில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் மோகன் கார்த்திக், செயலாளர் சேதுபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி அலுவலக வளாகத்தில் கட்சி நிர்வாகிகள் தமிழர் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கலந்து கொண்ட இசை நாற்காலி, கயிறு இழுக்கும் போட்டி, லெமன் ஸ்பூன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. முடிவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் பரிசுகளை வழங்கினார். இதில் மாவட்ட, மண்டல நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED புயல், மழையால் பயிர்கள் சேதம் 1,841 விவசாயிகளுக்கு ரூ.2.94 கோடி நிவாரணம்