போலியோ சொட்டு மருந்து முகாம் 31ம் ேததிக்கு ஒத்திவைப்பு

ஊட்டி,ஜன.17: நீலகிரி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று (17ம் தேதி) நடப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது கொரோனா தடுப்பூசி போடும் முகாம் மாவட்டத்தில் நடைபெறும் நிலையில், போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், இன்று 17ம் தேதி நடக்கவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் 31ம் தேதி நடத்தப்படுகிறது. மேலும், நீலகிரி மாவட்டத்தில் உள்ள 40 ஆயிரம் குழந்தைகளுக்கு வரும் 31ம் தேதி நடக்கும் போலியோ சொட்டு மருந்து முகாமின் போது, சொட்டு மருந்துகள் வழங்கப்படவுள்ளது. எனவே, அன்றைய தினம் அனைத்து தாய்மார்களும் தங்களது 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை முகாம் நடக்கும் இடங்களுக்கு சென்று தவறாமல் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும் என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories:

>