பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை ஊட்டியில் களைகட்டிய சுற்றுலா தலங்கள்

ஊட்டி, ஜன.17:  பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால், அனைத்து சுற்றுலா தலங்களும் களைகட்டியுள்ளது.  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் ஊட்டியை முற்றுகையிட்டுள்ளனர். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நேற்று அலை மோதியது. அதே போல், சுற்றுலா பயணிகளின் வாகனங்களினால், ஊட்டியில் உள்ள முக்கிய சாலைகளில் வாகன நெரிசலும் ஏற்பட்டது. மூன்று நாட்களுக்கு பின் நேற்று ஊட்டியில் பகலில் வெயில் அடித்தது. இதனால், அனைத்து சுற்றுலா தலங்களிலும் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவு காணப்பட்டனர். இருப்பினினும், மாலை நேரங்களில் குளிர் சற்று அதிகமாக காணப்பட்டதால், கடை விதிகளில் நடைபயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகள் ஸ்வெட்டர், சால்வை, தொப்பிகள் வாங்க கடைகளில் குவிந்தனர். சுற்றுலா பயணிகளால் வெம்மை ஆடை வியாபாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. சுற்றுலா பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக, ஊட்டியிலிருந்து கோவை மற்றும் வெளி மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு நேற்று பிற்பகல் வரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். மாலைக்குள் 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்திருக்க வாய்ப்புள்ளது. இன்றும் விடுமுறை என்பதால் இன்றும் சுற்றுலா பயணிகள் வரவாய்ப்புள்ளது.

Related Stories:

>