திமுக நிர்வாகி காரை வழிமறித்து அதிமுகவினர் ரகளை

கோவை, ஜன. 17: கோவை கிழக்கு மாவட்ட திமுக,  குறிச்சி பகுதி கழகத்திற்கு உட்பட்ட சுந்தராபுரத்தில்  பொங்கல் விழா மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், குறிச்சி வடக்கு பகுதி கழக பொறுப்பாளர் எஸ்ஏ.காதர், பொதுக்குழு உறுப்பினர் ஜகாங்கீர், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் இராசமாணிக்கம், உதயகுமார், இளைஞரணி அமைப்பாளர் நாகராஜசோழன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், பங்கேற்ற திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிவிட்டு அடுத்த நிகழ்ச்சிக்கு  காரில் ஏறி புறப்பட்டார். அப்போது அங்கிருந்த அதிமுகவினர் காரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டதால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>