மது, லாட்டரி விற்ற 11பேர் கைது

ஈரோடு, ஜன. 17: ஈரோடு மாவட்டத்தில் திருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று முன்தினம் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில், ஈரோடு தெற்கு, பவானிசாகர், பர்கூர், தாளவாடி, பவானி உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் மது விற்றதாக 7 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 46 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர். மேலும், பொது இடத்தில் மது அருந்தியதாக 2பேர் மீது பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  இதேபோல், மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றதாக தாலுகா, அம்மாபேட்டை, அந்தியூர் போன்ற பகுதிகளில் 4பேரை போலீசார் கைது செய்தனர். இது போல சத்தியமங்கலம் போலீசார் புதுவடவள்ளி பகுதியில் ரோந்து சென்ற போது, அந்த பகுதியில் தடை செய்யப்பட்ட கள் விற்றதாக அதே பகுதியை சேர்ந்த வேலுமணி (60) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 3 லிட்டர் தென்னங்கள்ளை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>