×

கஞ்சா விற்ற 3 பேர் கைது

ஈரோடு, ஜன. 17: ஈரோடு மாவட்டம் அந்தியூர் பெருமாபாளையம் பகுதியில் கஞ்சா விற்றதாக அதேபகுதியை சேர்ந்த சின்னச்சாமி (60) என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, 100 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். பர்கூர் துருசணாம்பாளையத்தில் கஞ்சா விற்றதாக மாதேவன் என்ற மாயன்(45) என்பவரை கைது செய்து, 75 கிராம் கஞ்சாவும், வெள்ளித்திருப்பூர் பகுதியில் சுப்பிரமணி(65) என்பவரை போலீசார் கைது செய்து, 50 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED கஞ்சா வியாபாரியை வெட்டிய 3 பேர் கைது ஒருவருக்கு வலை