×

ராஜபாளையம் அருகே சாலையை சீரமைக்கக்கோரி சமையல் போராட்டம்

ராஜபாளையம், ஜன. 13:  ராஜபாளையம் அருகே, செட்டியார்பட்டி பேரூராட்சியில் அம்மையப்பபுரம் உள்ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், 20க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள சாலை கடந்த 5 ஆண்டாக சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சாலை வழியாகத்தான் செட்டியார்பட்டிக்கு செல்ல வேண்டும். இந்நிலையில், சாலையை சீரமைக்காததைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அரசு ஆரம் சுகாதார நிலையம் முன்பு சாலையில் நேற்று சமையல் செய்யும் போராட்டம் நடத்தினர். இதற்கு அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்.  அப்போது சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Cooking protest ,road ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...