பவானிசாகர் அருகே ஊருக்குள் நுழைய முயன்ற காட்டு மாடு: கிராம மக்கள் அச்சம்

சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு மாடு ஊருக்குள் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, மான், காட்டு மாடு உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் நடமாடுகின்றன.

இதற்கிடையே பவானிசாகர் வனச்சரகம் புதுப்பீர் கடவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு மாடு இன்று காலை பசுவபாளையம் கிராமத்தை ஒட்டியுள்ள தரிசு நிலங்களில் நடமாடியதோடு ஊருக்குள் நுழைய முயன்றது. காட்டு மாடு நடமாடுவதை கண்ட கிராம மக்கள் மிகுந்த அச்சம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் ஒன்றிணைந்து காட்டுமாடு ஊருக்குள் நுழையாமல் தடுப்பதற்காக சத்தம் போட்டு வனப்பகுதிக்கு விரட்டினர். இதைத்தொடர்ந்து காட்டு மாடு மெதுவாக வனப்பகுதி நோக்கி சென்றது. சமீபகாலமாக வனவிலங்குகள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கிராமங்களில் நுழைவதால் மனித வனவிலங்கு மோதல் ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

Related Stories: