அனுமன் ஜெயந்தி

தேனி, ஜன. 13: தேனிஅல்லிநகரத்தில் ஜம்புகேஸ்வரர் உடனாய அகிலாண்டேஸ்வரி அம்மன் மற்றும் பரமேஸ்வரி அம்மன்கோயில் உள்ளது. இங்கு விநாயகர், பாலாஜி, லட்சுமி, கருடாழ்வார், அனுமன், முருகன் தட்சிணாமூர்த்தி, சனிபகவான் ஆகிய சுவாமிகள் உள்ளனர். நவகிரக சப்த கன்னிகள் வழிபாடும் நடக்கும். இதனால் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகம் இருக்கும். இந்நிலையில், நேற்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இக்கோவிலில் உள்ள அனுமன் சிலைக்கு சிறப்பு அபிஷேக ஆராதணை நடத்தப்பட்டது. அனுமர் ஜெயந்தியையொட்டி அனுமர் விக்ரகம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வடமாலை சாத்தப்பட்டது. இதில் தேனி அல்லிநகரம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சில்வார்பட்டியில் விழா

தேவதானப்பட்டி  அருகே, சில்வார்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு,  சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: