காதைக் கிழிக்கும் ‘ஏர்ஹாரன்கள்’

தேவதானப்பட்டி, ஜன. 13: தேவதானப்பட்டி பகுதியில் செல்லும் கனரக வாகன ஓட்டிகள், அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்களை பயன்படுத்துவதால், பொதுமக்களுக்கு செவித்திறன் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. தேவதானப்பட்டி பகுதியில் 30க்கும் மேற்பட்ட உட்கடை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் சரக்கு வாகனங்கள், கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த வாகனங்களில் அதிக சத்தத்துடன் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்துகின்றனர்.

இதுதவிர தேவதானப்பட்டி, சில்வார்பட்டி, ஜெயமங்கலம், வடுகபட்டி வழியாக பெரியகுளத்திற்கு செல்லும் தனியார் பஸ்களும் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்துகின்றனர். இதனால், பொதுமக்களுக்கு செவித்திறன் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. சாலை வழியாகச் செல்லும் முதியவர்கள், இருதய நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, போக்குவரத்து போலீசார் அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை பயன்படுத்தும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: