டாஸ்மாக் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

சிவகங்கை, ஜன.13: சிவகங்கை அரண்மனைவாசல் முன் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் ஊழியர்களிடம் நீதிமன்ற உத்தரவை மீறி 92 சதவீதம் அபராத தொகை கட்டச் சொல்லி மிரட்டி வரும் மாவட்ட அலுவலகத்தை கண்டித்தும், வசூல் செய்த தொகையை திரும்ப கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், மாதம்தோறும் கடைக்கு ரூ.10 ஆயிரம் வீதம் லஞ்சம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்டத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குமார் முன்னிலை வகித்தார். போராட்டத்தை விளக்கி சிஐடியு மாவட்ட செயலாளர் வீரையா, மாவட்ட துணைத்தலைவர் மெய்யப்பன் பேசினர். நிர்வாகிகள் ராஜேந்திரன், ராஜ்குமார், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>