லாரி மோதி வாலிபர் பலி

மானாமதுரை, ஜன.13: மானாமதுரை அருகே லாரி மோதி வாலிபர் உயிரிழந்தார். மற்றொரு வாலிபர் படுகாயமடைந்தார். மானாமதுரை அருகே மேலப்பசலை கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் மகன் விக்னேஸ்வரன்(20). இவரும் அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் நாகரத்தினம் (28) என்பவரும் மானாமதுரையில் இருந்து மேலப்பசலைக்கு டூவீலரில்  திரும்பிக் கொண்டிருந்தனர். சங்கமங்கலம் அருகே சென்றபோது அவர்களுக்கு பின்னால் வந்த டூவீலர் உரசியபடி சென்றது. இதில் நிலைகுலைந்த விக்னேஸ்வரன், நாகரத்தினம் டூவீலருடன் வலதுபுறம் சென்ற லாரிக்குள் விழுந்தனர்.

இதில் விக்னேஸ்வரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். நாகரத்தினம் படுகாயங்களுடன் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தகவல் அறிந்து சென்ற மானாமதுரை போலீசார் லாரி டிரைவர் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா மேல முடிமன் கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் வேல்முருகன்(26) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிசென்ற டூவீலரில் வந்தவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>