சென்னையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 10 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு

சென்னை: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு இந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் காணும் பொங்கல் அன்று ஒன்று கூடுவதை தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்தும் வகையில், சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட சுற்றுலா இடங்களான மெரினா கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா உட்பட மக்கள் ஒன்று கூடும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் அன்று மாட்டு வண்டிகளில் ஊர்வலமாக செல்லவும் போலீசார் தடை விதித்துள்ளனர். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், காணும் பொங்கல் பண்டிகையின் போது யாரேனும் பைக் ரேசில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 2 கூடுதல் கமிஷனர்கள் தலைமையில் 4 இணை கமிஷனர்கள் மேற்பார்வையில் 12 துணை கமிஷனர்கள் என சென்னை முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>