×

கண்மாய் நிரம்பியது

கீழக்கரை, ஜன.13: மோர்குளம் கண்மாய் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த குளங்கள், கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. கீழக்கரை அருகே மோர்குளம் கிராமத்தில் உள்ள கண்மாயும் நிரம்பியது. இதனால் இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை காலத்தில் மோர்குளத்தில் தண்ணீர் பிரச்சனை இருக்காது என தெரிவித்தனர்.


Tags :
× RELATED தஞ்சையில் இலவச கண்பரிசோதனை முகாம் 18ம் தேதி நடக்கிறது