லோன் வாங்கி தருவதாக மோசடி.

மதுரை  வி.கரிசல்குளம் ராமுன்னி நகரைச் சேர்ந்த இளையராஜா மனைவி  விஜயகுமாரி(33). இவரை இதே பகுதியை சேர்ந்த போஸ் உள்ளிட்ட சிலர் சந்தித்து,  ஆனந்தி என்பவர் நடத்திவரும் அறக்கட்டளையிலிருந்து, வீடு கட்டுவதற்கு லோன்  வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதை நம்பிய விஜயகுமாரி, ரூ.1லட்சத்து 18 ஆயிரத்தை போஸ்  உள்ளிட்ட சிலரிடம் கொடுத்துள்ளார். லோன்  வாங்கி தராததால் பணத்தை விஜயகுமாரி கேட்டபோது, மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. கூடல்புதூர் போலீசார் விசாரணை நடத்தி, போஸ், செல்வராணி, அறக்கட்டளை  நடத்தி வரும் ஆனந்தி, மற்றும் ராஜ்குமார், யேசுதாஸ் ஆகிய 5 பேர் மீது  வழக்குப்பதிவு செய்தனர்.

Related Stories:

>