பொங்கல் பரிசு வழங்க கோரி ஆட்டோ தொழிலாளர்கள் அரை நிர்வாண ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், ஜன. 13:திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு சிஐடியு மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் முருகேசன், நகர் கமிட்டி பொறுப்பாளர் பாண்டியன், பொருளாளர் தவக்குமார் முன்னிலை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தில் நலவாரிய தொழிலாளர்களுக்கு வழங்குவதுபோல் தமிழக அரசு ஆட்டோ தொழிலாளர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும், பண்டிகைக்கால சீருடை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். முன்னதாக மேலாடையின்றி அரை நிர்வாணமாக தரையில் பொங்கல் பானையை வைத்து அரசுககு எதிராக கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>