கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி பல்லடத்தில் கறிக்கோழி உற்பத்தி 30% குைறப்பு

பொங்கலூர், ஜன.13: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பண்ணைகள் மூலம் கறிக்கோழி வளர்ப்பு தொழிலில் இப்பகுதி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பல்லடம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பண்ணைகளில் இருந்து தினமும் சுமார் 10 லட்சம் கிலோ கறிக்கோழிகள் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி, மகாராஷ்டிராவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் கேரளா, இமாச்சலபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் பறவை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இதனால், பல்லடத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இறைச்சிக்காக கறிக்கோழிகள் அனுப்பி வைக்கப்படுவது அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு கறிக்கோழிகள் கொண்டு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பறவை காய்ச்சல் எதிரொலி காரணமாக பல்லடம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பண்ணைகளில் கறிக்கோழி உற்பத்தி சுமார் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: