தி.மு.க. பொறுப்பாளர்கள் பொங்கல் வாழ்த்து

திருப்பூர், ஜன.13:  தி.மு.க. கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.பெ.சாமிநாதன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இல.பத்மநாபன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உழைப்பின் மேன்மையை போற்றி, உழைக்கும் மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் உயிரினங்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக பொங்கல் விழா இருந்து வருகிறது. இவ்விழா ஒவ்வொரு ஊரிலும், ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடும் வழக்கம் காலம், காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் இந்த பொங்கல் நன்னாளில் இருள் சூழ்ந்து கிடக்கும் தமிழகத்தை மீட்டு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் அரியணையில் அமர வைத்து தமிழகத்தை தலை நிமிர்ந்து வளர்ச்சி பாதையில் முன்னேற்றம் காணும் வகையில், அனைவரும் உறுதியேற்பதோடு, களப்பணியாற்றுவோம்.  இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளனர்.

Related Stories:

>