மக்களுக்கு நல்ல திட்டங்களை செய்யவே பா.ஜ.வுடன் கூட்டணி

திருப்பூர், ஜன.13:திருப்பூரில் வாலிபாளையம், பெரிய தோட்டம் ஆகிய பகுதிகளில் அம்மா மினி கிளினிக் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் திறந்து வைத்தார். அதன்பின் அவர் பேசியதாவது:  அ.தி.மு.க., பா.ஜ.வுடன் கூட்டணியில் இருப்பதால் பா.ஜ.வுக்கு அ.தி.மு.க. அடிமையாகிவிட்டது என பேசி வருகிறார்கள். மினி கிளினிக், மருத்துவ கல்லூரி, விவசாய நலன்கள் என பொதுமக்களுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை செய்ததற்காக பா.ஜ.வுடன் நல்லுறவில் இருக்கிறோம். மக்களுக்கு ஒரு ஆபத்து வந்தால் ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் கொதித்தெழும். இந்த அரசு மக்களுடைய அரசு. எங்கள் தலைவர் எம்.ஜி.ஆர் மட்டும்தான் இஸ்லாமியர்களுடன் மிக நெருக்கத்துடன் இருந்துள்ளார். அவர் ஹஜ் யாத்திரைக்கு கூடுதல் நிதி வழங்கி இஸ்லாமிய மக்களுக்கு உறுதுணையாக இருந்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. குணசேகரன், மாநகராட்சி கமிஷனர் சிவக்குமார், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கண்ணப்பன், அர்பன் வங்கி தலைவர் சடையப்பன், மாணவரணி செயலாளர் அன்பகம் திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>