கூடலூர் நகராட்சியில் புதிய சாலை அமைக்கும் பணி துவக்கம்

கூடலூர்,ஜன.13: கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு சின்னப்பள்ளி வாசல் பகுதியில் இருந்து அப்துல்கலாம் நகர் செல்லும் சாலையில் ரூ. 8.40 லட்சம் செலவில் இன்டர்லாக் சாலை,  முரசொலி மாறன் நகர் பகுதியில் ரூ.4.80 லட்சம் செலவில் நடைபாதை மற்றும் கூடலூர் ஊட்டி சாலை பழைய பேருந்து நிலையம் பகுதியில் அக்ரஹாரம் சாலை எதிர்ப்புறம் நியாயவிலை கடைக்கு செல்லும் சாலையில் ரூ.2 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி நேற்று துவக்கி வைத்தார். இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் பாண்டியராஜன் ஒன்றிய செயலாளர், லியாக்கத் அலி, கிளை செயலாளர் இஸ்மாயில்  மற்றும் நகர நிர்வாகிகள் ரசாக், அனீபா, ஜபருல்லா, ஜெயக்குமார், இளஞ்செழியன் மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>