கோவையில் தே.மு.தி.க. சார்பில் இன்று பொங்கல் விழா பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்கிறார்

கோவை, ஜன. 13: தே.மு.தி.க. மாநில தலைமை கழகத்தின் சார்பில் இந்த ஆண்டு பொங்கல் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை வேலாண்டிபாளையத்தில் இன்று (புதன்) மாலை 5 மணிக்கு நடக்கிறது.

இந்நிகழ்ச்சியில், பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்கிறார். பின்னர், எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் கொடியேற்று விழா, பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் அலுவலகம் திறப்பு விழா உள்பட பல்வேறு  நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

அவருக்கு, பீளமேடு ஜென்னிஸ் கிளப் ஓட்டலில், மாநகர் மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் காட்டன் செந்தில் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாநகர் மாவட்ட செயலாளர் காட்டன் செந்தில் தலைமையில் நிர்வாகிகள் பாபு, லிங்கம், செல்வலிங்கம், பழனி, தீனதயாளன், முத்துக்குமரன் உள்பட பலர் செய்துள்ளனர்.

Related Stories:

>