மலைவாழ் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி

கோவை, ஜன. 13: ஆனைக்கட்டி பகுதியை சேர்ந்த  6 மலைவாழ் கிராமங்களில் வசிக்கும் 150 குடும்பங்களுக்கு  அரிசி உள்ளிட்ட 19 வகையான அத்தியாவசிய மளிகை பொருள் அடங்கிய தொகுப்பை மகேந்திரா கிராமப்புற வீட்டுவசதி நிதியுதவி  நிறுவனத்துடன் இணைந்து என்.எம்.சி.டி. சேவை நிறுவனம் இலவசமாக வழங்கியது. சொரண்டி மலைக்கிராமத்தில் நடந்த விழாவுக்கு என்.எம்.சி.டி. சேவை நிறுவன நிர்வாக அறங்காவலர்  ஏ.எஸ்.சங்கரநாராயணன் தலைமை தாங்கினார். மகேந்திரா கிராமப்புற வீட்டுவசதி நிதியுதவி நிறுவன  மண்டல வர்த்தக தலைவர் ரவிசங்கர் நலத்திட்ட உதவி வழங்கினார். நிறுவன அதிகாரிகள்   செந்தில்குமார், ரமேஷ், கருப்பசாமி, கோகுல்நாதன், ராஜேஷ், மகேஷ், கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>