×

இடத்தை சமன் செய்ய வலியுறுத்தி 2வது நாளாக மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு,  ஜன. 13:   ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை  இடத்தை செய்ய வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தில்  மாற்றுத்திறனாளிகள் நேற்று 2வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர்.
ஈரோடு தாலுகா அலுவலகத்தில் சித்தோடு  நல்லகவுண்டம்பாளையத்தில் இலவச வீட்டுமனை பெற்ற 82 மாற்றுத்திறனாளிகள்,  இடத்தை சமன் செய்து அளவீடு செய்து ஒதுக்கி கொடுக்க வலியுறுத்தி நேற்று  முன்தினம் திடீர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம்  இரவு 9 மணிக்கு ஆர்.டி.ஓ. சைபுதீன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, அவர் கூறுகையில், இடத்தில் உள்ள  பாறைகளை வெடி வைத்து தகர்த்து அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு உரிய நிதி  தற்போது இல்லை. பொங்கல் பண்டிகைக்கு பிறகு இடத்தை சமன் செய்து கொடுக்க  நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் சுமூக  தீர்வு ஏற்படாததால், இடத்தை சமன் செய்து கொடுக்கும் வரை எங்களது போராட்டம்  தொடர்ந்து நடைபெறும். நாங்கள் பொதுமக்களுக்கும், அரசு பணிக்கும் எவ்வித  இடையூறும் செய்யாமல் தாலுகா அலுவலகத்திலேயே காத்திருக்கிறோம் என கூறி தொடர்  போராட்டத்தில் ஈடுபட்டனர். தாலுகா அலுவலக வளாகத்திலேயே விடிய விடிய  போராட்டத்தில் ஈடுபட்டு, நேற்று காலை 2வது நாளாக மாற்றுத்திறனாளிகள்  கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை தாசில்தார் இடத்தை சமன் செய்து தருவதாக எழுத்து பூர்வமாக உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

Tags : space ,
× RELATED இஸ்ரோ தகவல் இன்சாட் 3டிஎஸ் விண்கலம் பூமியை படம் எடுத்தது