சமத்துவ பொங்கல் விழா

காடையாம்பட்டி, ஜன.13: காடையாம்பட்டி அடுத்துள்ள பண்ணப்பட்டி ஊராட்சி, மாரகவுண்டன்புதூர் கிராமத்தில் திமுக, காங்கிரஸ் கட்சிகள் இணைந்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடின. இதில், மூத்தோர்களுக்கு உதவித்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டனது. இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் பிரமுகர் சஞ்சாய்காந்தி செய்திருந்தார். விழாவில் காடையாம்பட்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல், செங்கரும்பு வழங்கப்பட்டது. 350 மூத்தோர்களுக்கு பொங்கல், கரும்புடன் நூறு ரூபாய் வழங்கப்பட்டது.

Related Stories:

>