சூரியன் எப்எம் 93.9 சார்பில் சேலத்தில் விழிப்புணர்வு பிரசாரம்

சேலம், ஜன.13: சேலத்தின் நம்பர் ஒன் சூரியன் எப்.எம். 93.9 சார்பில், சாலை விதிகளை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.   சேலம் அரசு மருத்துவமனை முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் காவல்துறை துணை ஆணையர் செந்தில்(குற்றம்-போக்குவரத்து பிரிவு) கலந்துகொண்டு “நில், கவனி, கேள்!” பிரசாரத்தை துவக்கி வைத்தார். பிரசாரத்தின்போது சேலம் சூரியன் எப்.எம். 93.9, காவேரி மருத்துவமனை இணைந்து, வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு இலவச ஹெல்மெட் வழங்கினர். காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்தவர்களுக்கு சீட் பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து அறிவுறுத்தினர்.

Related Stories:

>