விவேகானந்தர் பிறந்தநாள் விழா

ஆத்தூர், ஜன.13: ஆத்தூர் கிளை நூலகத்தில் விவேகானந்தரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, மாணவர்களுக்கு பேச்சு, ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன. விழாவிற்கு வழக்கறிஞர் மாதேஸ்வரன் தலைமை வகித்தார். முதல்நிலை நூலகர் சேகர் வரவேற்றர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு ரமேஷ் பரிசு வழங்கினார். செல்வம், ராமச்சந்திரன், ஜெய்கணேஷ், சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நூலகர் அழகுவேல் நன்றி கூறினார்.

Related Stories:

>