திமுக கவுன்சிலர்கள் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு

ஓமலூர், ஜன.13: ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் 33 ஊராட்சிகள் உள்ளன. இந்நிலையில், கடந்த 2019-ல் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், திமுகவை சேர்ந்த குப்புசாமி, கோபால்சாமி, சிவஞானவேல், தேன்மொழி தனசேகரன், செல்விராஜா, துரைசாமி, லலிதா அருள்பாலாஜி, வசந்தாகுமார், சுமதி மணிவாசகம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது 2ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளனர். ஆனால், இதுவரை நிதி ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. மக்களுக்கு அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வில்லை. ஆனால், தினமும் ஒவ்வொரு பகுதிகளியிலும் 2 கோடி, 3 கோடி என்று பூமி பூஜை போடப்படுகிறது. இந்நிலையில், திமுகவை சேர்ந்த 9 கவுன்சிலர்கள் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து ஓமலூர் நகரம் மற்றும் ஒன்றிய கிராமங்கள் முழுவதும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில், மக்கள் பணிகள் எதுவும் செய்யாமல் இருக்க, நிதி எதுவும் கொடுக்காமல் புறக்கணிக்கும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை முடிந்து,இரண்டாம் ஆண்டு துவங்கியுள்ளது. ஓமலூர் ஒன்றிய திமுக கவுன்சிலர்களுக்கு இதுவரை எந்த ஒரு நிதியும் வழங்காத தமிழக அரசுக்கு நன்றி என்று ஒட்டப்பட்டுள்ளது. இதனால், ஓமலூர் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: