புகையில்லாத போகி கொண்டாட ஆணையாளர் வேண்டுகோள்

நாமக்கல், ஜன.13: நாமக்கல் நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தைப்பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாமக்கல் நகரில் பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் ஏற்படும் குப்பைகளை மக்கும் வகை, மக்காத வகை என தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். இன்று(13ம் தேதி) போகி பண்டிகைக்கு பொதுமக்கள் பழைய குப்பைகள் மற்றும் பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்த தடைசெய்யப்பட்டுள்ளது. மீறி தீ வைப்பவர்களை கண்டுபிடித்தால், திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் படி, ₹2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். நாமக்கல்  நகராட்சி பகுதியில் புகையில்லாத போகி பண்டிகை கொண்டாட மக்கள் தங்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>