திமுக செயற்குழு கூட்டம்; மூர்த்தி எம்எல்ஏ அறிக்கை

திருச்செங்கோடு, ஜன.13: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ். மூர்த்தி எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் வருகிற 16ம் தேதி காலை 11 மணிக்கு திருச்செங்கோட்டில் மாவட்ட அவைத்தலைவர் நடனசபாபதி  தலைமையில் நடக்கிறது. கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் 19ம்தேதி குமாரபாளையத்தில் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டம் குறித்து ஆலோசக்கப்படுகிறது. எனவே மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் மற்றும் மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து  கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>